ரூ.10 கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி
சிவகாசி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மேயர் சங்கீதா இன்பம் நன்றி கூறினார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மேயர் சங்கீதா இன்பம் நன்றி கூறினார்.
குறை கேட்டார்
சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருத்தங்கல் பகுதி மக்களிடம் குறைகள் கேட்டனர். அப்போது 7-வது வார்டு பகுதி பொது மக்களுக்கு மேயர் சங்கீதா இன்பம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை அந்த வார்டு கவுன்சிலர் சேதுராமன் செய்திருந்தார். இதை தொடர்ந்து 6 மற்றும் 7-வது வார்டு பகுதியில் நடந்து சென்று மக்களிடம் குறை களை கேட்டார். அப்போது 6-வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீநிகா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
அதன்பின்னர் மேயர் சங்கீதா இன்பம் நிருபர்களிடம் கூறியதாவது, சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. பதவி ஏற்புக்கு பின்னர் இந்த பகுதிக்கு தற்போது முதன்முறையாக வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி உள்ளனர்.
அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் நாட்களில் நிறைவேற்றப்படும். இந்த நிலையில் தமிழக அரசு சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிதியை கொண்டு மாநகராட்சி பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருத்தங்கல் நகர பொறுப்பாளர் உதயசூரியன், சிவகாசி நகர பொறுப்பாளர் காளிராஜன், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் பொன் சக்திவேல், கவுன்சிலர்கள் ஆ.செல்வம், ஸ்ரீநிகா சீனிவாச பெருமாள், சசிக்குமார், திருப்பதி, ஜெயராணி நிர்வாகிகள் ராஜேஷ், மாரீஸ்வரன், செந்தில் அரசு, சிவநேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக 7-வது வார்டு பகுதியில் நடைபெற்ற தார்சாலை அமைக்கும் பணியினை மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story