ரூ.2 லட்சம் சரவெடிகள் பறிமுதல்


ரூ.2 லட்சம் சரவெடிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2022 1:54 AM IST (Updated: 21 March 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே ரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள சத்திரபட்டியில் மடத்துப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 44) என்பவருக்கு சொந்தமான குடோனில் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் அனுமதியின்றி பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை தாசில்தார் சுந்தரமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர் அங்கு சென்று குடோனை  சோதனையிட்டார். அப்போது அங்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட சரவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தார்.  பறிமுதல் செய்யப்பட்ட சரவெடிகளை வெம்பக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் வெம்பக் கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் வெங்கடேசை கைது செய்தார்.

Next Story