நீதித்துறைக்கு கொலை மிரட்டல் ஏற்புடையதல்ல-மதுரையில் முன்னாள் நீதிபதி பேட்டி
நீதித்துறைக்கு கொலை மிரட்டல் ஏற்புடையதல்ல என்று மதுரையில் முன்னாள் நீதிபதி கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் நீதிபதியும், மத்திய அரசின் சட்ட நிலைக்குழு உறுப்பினருமான ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகமே போற்றக்கூடிய நீதித்துறையை தாக்குவதாக மிரட்டுவது ஏற்புடையது அல்ல. இந்தியாவில் நீதித்துறை ஒன்றுதான் நேர்மையாக செயல்படுகிறது. அதையும் நீதிபதிகளை கொன்றுவிடுவோம், தாக்குவோம் என்று மிரட்டினால் நீதிபதிகள் எப்படி நேர்மையாக தீர்ப்பு அளிக்க முடியும். நேர்மையாக செயல்படக்கூடிய நீதித்துறையை இப்படி மிரட்டுகிறார்கள். தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது.
பீகாரில் நடைபயணம் மேற்கொண்ட நீதிபதியை கொலை செய்ததுபோல மீண்டும் நடந்துவிடும் என்று மிரட்டுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி தீர்ப்பளிக்க முடியும். இளைஞர்களை தவறான வழியில் அழைத்துச் செல்கின்றனர். இதை யார் தூண்டி விடுகிறார்கள் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை கேட்பது நீதித்துறை தான். தமிழக முதல்-அமைச்சர் இதை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை. யாராக இருந்தாலும், சட்டத்தை ஒரு போதும் கையில் எடுத்து கொள்ள கூடாது. ஒரே ஒரு நீதிபதி மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. தீர்ப்புக்கும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீதித்துறையை தான் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். இதில்தான் எந்தவித ஊழலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story