கவுந்தப்பாடியில் கண்களை கட்டிகொண்டு சிலம்பம் சுற்றி சிறுமி சாதனை


கவுந்தப்பாடியில் கண்களை கட்டிகொண்டு சிலம்பம் சுற்றி சிறுமி சாதனை
x
தினத்தந்தி 21 March 2022 2:13 AM IST (Updated: 21 March 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடியில் கண்களை கட்டிகொண்டு சிலம்பம் சுற்றி சிறுமி சாதனை படைத்தாா்.

கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் இக்பால். இவருடைய மகள் ஹனுனா சஜ்வா (வயது 4). இவர் பெரியபுலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.
இவருக்கு சிலம்பத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் அவரது பெற்றோர்கள் நோபல் உலக சாதனை நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான சிலம்பம் சுற்றும் போட்டி தனியார் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.
இதில் ஹனுனா சஜ்வா கண்களை கட்டி கொண்டு 1 மணி நேரம் 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஹனுனா சஜ்வா, 195 நாட்டு கொடிகளின் பெயர்கள் வாசிப்பில் இந்திய புக் ஆப் ரெக்கார்ட், கலாம் வோல்ட் ரெகார்ட் மற்றும் 30 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து உலக சாதனை படைத்த சிறுமி ஹனுனாவிற்கு நோபல் வோல்ட் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

Next Story