பெருந்துறை அருகே பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது; உடந்தையாக இருந்த பெற்றோர்களும் சிக்கினர்

பெருந்துறை அருகே பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது; உடந்தையாக இருந்த பெற்றோர்களும் சிக்கினர்
x
தினத்தந்தி 21 March 2022 2:24 AM IST (Updated: 21 March 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த வாலிபரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த திருமணத்துக்கு உடந்தையாக செயல்பட்ட பெற்றோர்களையும் போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை
பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த வாலிபரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த திருமணத்துக்கு உடந்தையாக செயல்பட்ட பெற்றோர்களையும் போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
குழந்தை திருமணம்
பெருந்துறையை அடுத்த பெரியவீரசங்கிலி அருகே உள்ள பச்சாக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 51). இவருடைய மனைவி ஜெயமணி (46). இவர்களுடைய மகன் தனசேகர் (24). இவருக்கும் பெருந்துறை       பகுதியை  சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2  மாணவி ஒருவருக்கும் கடந்த 19-ந் தேதி திருமணம் நடந்தது. இது குழந்தை திருமணம் என்பதால் இதுபற்றி பெருந்துறை குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. 
கைது
தகவல் கிடைத்ததும் பெருந்துறை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நல அமைப்பின் தலைமை நிர்வாகி சுபாஷினி, இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தனசேகரை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக தனசேகரின் தந்தை சண்முகம், தாய் ஜெயமணி மற்றும் மாணவியின் தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Next Story