திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இல்ல திருமண வரவேற்பு விழா
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
திருச்சி
திருச்சியை சேர்ந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான மறைந்த கே.என்.ராமஜெயம்-லதா தம்பதியரின் மகன் ஆர்.விநீத் நந்தனுக்கும், வேலூர் மாவட்டம் கண்டுப்பேடுவை சேர்ந்த கே.சீனிவாசன்-கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகள் எஸ்.அக்ஷயா கவுசிக்கிற்கும் கடந்த 16-ந் தேதி சென்னை திருவான்மியூரில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் திருமண வரவேற்பு விழா திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
அமைச்சர்கள்-தொழில் அதிபர்கள் வாழ்த்து
விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மூர்த்தி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருநாவுக்கரசர் எம்.பி., மாவட்ட கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், தொழில் அதிபர் கே.ஏ.எஸ்.ராமதாஸ், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் கே.எம்.எஸ். ஹக்கீம், திருச்சி மாவட்ட தாலுகா நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தலைவர் சின்னசாமி, செயலாளர் சிவசங்கர், மாவட்ட துணைத் தலைவர் கேசவன், டெம்பிள் இன் ஓட்டல் சங்கரன், ஏ ஒன் ஓட்டல் வி.பி.ஆறுமுகபெருமாள், கனி பிராய்லர்ஸ் கனி.
மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், லால்குடி நகர்மன்ற தலைவரும், நகர செயலாளருமான பி.துரைமாணிக்கம், துணைத்தலைவர் சுகுணா ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு விழாவில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டதால் கேர் கல்லூரி வளாகம் திருவிழா கூட்டம் போல காணப்பட்டது. திருமண வரவேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story