பவ்டா சுயஉதவி குழுவினருக்கு கடன் வழங்கும் விழா


பவ்டா சுயஉதவி குழுவினருக்கு கடன் வழங்கும் விழா
x
தினத்தந்தி 21 March 2022 2:56 AM IST (Updated: 21 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பவ்டா சுயஉதவி குழுவினருக்கு கடன் வழங்கும் விழா

வளவனூர், 

விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பவ்டா சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் விழா விழுப்புரம் பவ்டா அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு பவ்டா மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். இணை இயக்குனர் அல்பினா ஜாஸ் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நீரஜ்குமார் கலந்து கொண்டு சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.5 கோடியே 14 லட்சம் மதிப்பில் கடன்களை வழங்கினார். பவ்டா சுய உதவி குழுவினர் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து இதுவரை 1845 சுய உதவி குழுவினருக்கு ரூ.109.76 கோடி கடன் வழங்கி உள்ளது. இப்பணியை பாராட்டும் விதமாக கடன் வரம்பு இலக்கு தொகை ரூ. 25 கோடியில்இருந்து ரூ.100 கோடியாக பவ்டா நிறுவனத்திற்கு உயர்த்தி உள்ளது. விழாவில் பாரத ஸ்டேட் வங்கி சேலம் நிர்வாக அலுவலக இணை பொது மேலாளர் பிரசன்னகுமார், விழுப்புரம் மண்டல மேலாளர் சீதாராமன், வங்கியின் முதன்மை பொது மேலாளர் சியாமளா, விழுப்புரம் விவசாய அபிவிருத்தி கிளை மேலாளர் முகேஷ் தமிழரசன், பவ்டா பொது மேலாளர் சாந்தாராம், அலுவலர்கள் ஆனந்த வேலன், சிவராஜ், கார்த்திக் மற்றும் சுய உதவி குழுவினர்கள், பிரதிநிதிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story