ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலை உச்சத்தில் இருந்தபோது ஒரே நாளில் 1,300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த ஒரு வாரமாக 5-க்கும் உட்பட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 918 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 13 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story