வெவ்வேறு பிரச்சினைகளுக்காக 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


வெவ்வேறு பிரச்சினைகளுக்காக 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2022 4:55 PM IST (Updated: 21 March 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலத்தை மீட்டு தர வேண்டும்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து மனு அளித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது செங்கம் தாலுகா பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி சிவா என்ற பெண் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் கூறுகையில், கண்பார்வையற்ற கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றேன். எனது அனுபவித்தில் உள்ள நிலத்தை பக்கத்து நிலத்துகாரர் அவருக்கு சொத்தமானது என மிரட்டல் விடுத்து வருகிறார். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. செங்கம் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் பெற்று கொண்டு அவருக்கு தவறான உரிமை சான்று வழங்கி உள்ளனர். 

எனவே இது குறித்து விசாரணை நடத்தி எனது சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அவரை போலீசார் குறைதீர்வு கூட்டத்திற்கு அழைத்து சென்று மனு அளிக்க செய்தனர்.

பொய் வழக்கு சித்தரிக்க முயற்சி

அதேபோல் திருவண்ணாமலை குபேர நகர் பகுதியை சேர்ந்த தென்றல் என்ற பெண்ணும் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஒருவரிடம் மருத்துவ செலவிற்காக 20 பைசா வார வட்டியில் ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கினேன். வாரம் ரூ.10 ஆயிரம் என 2 அரை மாதங்கள் வட்டி கொடுத்து வந்தேன். என்னால் தற்போது பணம் கொடுக்க முடியவில்லை. 

இதனால் அவர் மிரட்டல் விடுத்து வருகிறார். இவருக்கு சாதகமாக திருவண்ணாமலை தாலுகா போலீசாரும் கட்ட பஞ்சாயத்து செய்து வருகின்றனர். நீதிமன்றத்தில் நான் பார்த்து கொள்கிறேன் என்றாலும் போலீசார் விட மறுகின்றனர். நேற்று முன்தினம் 11 போலீசார் திடீரென வீட்டிற்கு வந்து அவருக்காக மிரட்டுகின்றனர். 
அந்த நபருக்கு சாதகமாக போலீசார் என் மீது பொய் வழக்கு சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story