பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் படுகாயம்


பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் படுகாயம்
x
தினத்தந்தி 21 March 2022 5:54 PM IST (Updated: 21 March 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பெண் படுகாயம் அடைந்தார்.
பராமரிப்பு
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் நகர் மத்தியில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன. இவ்வாறு கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 4 தடவைக்கு மேல் மேற்கூரை இடிந்து பலர் படுகாயமடைந்துள்ளனர். 
இந்தநிலையில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் சென்னை செல்லும் பஸ் நிற்கும் இடத்தில் குயவன்குடியை சேர்ந்த பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் நிலைய மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது. சிமெண்ட் காரைகள்  பெண்ணின் தலையில் விழுந்ததால் இதில் அவர் படுகாயமடைந்தார். லேசாக ரத்தம் வழிந்த நிலையில் அவர் சென்னை செல்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று ஊருக்கு திரும்பிச் சென்றார். 
தடுப்பு வேலி
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அடிக்கடி இதுபோன்று மேற்கூரைகள் விழுந்து பலர் படுகாயம் அடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இது பற்றி அறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று உடைந்து விழுந்த கற்களை அப்புறப்படுத்தி அந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தனர். இதுபோன்று தற்காலிக நடவடிக்கை எடுக்காமல் நிரந்தரமாக பஸ்நிலைய பகுதியை சீரமைத்து கட்டிடத்தின் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story