எரிவாயுநுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; புதன்கிழமை நடக்கிறது


எரிவாயுநுகர்வோர் குறை தீர்க்கும்  நாள் கூட்டம்; புதன்கிழமை நடக்கிறது
x
தினத்தந்தி 21 March 2022 8:10 PM IST (Updated: 21 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடிமாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்தியஅரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள உள்ளனர். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்டவருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்கலாம்.
தீர்வு
பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இந்த கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம். எனவே பொதுமக்கள், நுகர்வோர் இந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story