ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிய 51558 குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிடும் பணி கலெக்டர் தகவல்
நீலகிரியில் ஆரோக்கியமான குழந்தையை கண்டறிய 51,558 குழந்தை களுக்கு எடை, உயரம் அளவிடும் பணி நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரியில் ஆரோக்கியமான குழந்தையை கண்டறிய 51,558 குழந்தை களுக்கு எடை, உயரம் அளவிடும் பணி நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஆரோக்கியமான குழந்தை
நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் ஆரோக்கியமான குழந்தையை கண்டறியும் முகாம் தொடக்க நிகழ்ச்சி ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் எஸ்.பி.அம்ரித் முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிடும் பணியை பார்வையிட்டார். வயதுக்கேற்ற எடை, உயரம் உள்ளதா என்பதை சரிபார்த்து ஆரோக்கியமாக இல்லாத குழந்தை களுக்கு ஊட்டச்சத்துக்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது:-
51,558 குழந்தைகள்
குழந்தைகளின் சீரான வளர்ச்சியை கண்டறிய மாதந்தோறும் எடை, உயரம் கணக்கிடுவது அவசியம்.
நீலகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு எடை, உயரம் ஆகிய விவரங்களை அளவிட்டு பதிவேற்றம் செய்கின்றனர்.
இதன்மூலம் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள், தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் என மொத்தம் 51,558 பேருக்கு எடை, உயரம் அளவிடும் பணி நடக்கிறது.
ஊட்டச்சத்து உணவுகள்
இதன் மூலம் வயதுக்கு ஏற்ற எடை, உயரம் இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக நெய், கடலை மிட்டாய் மற்றும் கம்பு, தினை, வரகு, ராகி, சாமை போன்ற சிறுதானிய வகைகள் தயார் செய்து வழங்கப்பட உள்ளது.
ஆரோக்கியமான குழந்தையை கண்டறியும் முகாம் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவ குமாரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story