அரசு ஊழியரை தாக்கியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை


அரசு ஊழியரை தாக்கியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 21 March 2022 9:53 PM IST (Updated: 21 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியரை தாக்கியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முதுகுளத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

முதுகுளத்தூர், 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆனைசேரி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் கதிரேசன். இவர் முதுகுளத்தூர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 13.2.2014 முன்விரோதம் காரணமாக செல்வநாயகபுரம் விலக்கு ரோட்டில் நல்லூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா, சேதுராமு, ஆனைசேரி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், கருப்பணன், வேல்முருகன் ஆகியோர் கதிரேசனை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதுகுளத்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, டிரைவரை தாக்கிய கருப்பையா, சேதுராமு, கருப்பணன், வேல்முருகன் ஆகியோருக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ. 500 அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், ராஜேந்திரனுக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி  தீர்ப்பு கூறினார். 

Next Story