தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி


தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 21 March 2022 9:57 PM IST (Updated: 21 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிலையில் காங்கயம் பழைய கோட்டை ஊராட்சி குட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மூர்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் திடீரென்று மூர்த்தி, தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தீக்குளிக்க விடாமல் அவரை தடுத்தனர். பின்னர் அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். 
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு சொந்தமான விவசாய பூமியில் வீடு கட்டி வருகிறேன். பழைய கோட்டை ஊராட்சி நிர்வாகம், விவசாய பூமியில் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்கள். என்னைப்போல் மற்றவர்களும் விவசாய பூமியில் வீடுகள் கட்டியுள்ளனர். ஆனால் மாற்றுத்திறனாளியான எனது வீட்டை மட்டும் அகற்றுமாறு கூறி வருகிறார்கள். தடையை மீறி வீடு கட்டினால் இடித்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். ஊராட்சிகள் கட்டிட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். எனக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story