சின்னசேலம் அருகே விஷ வண்டு கடித்து பள்ளி மாணவி சாவு


சின்னசேலம் அருகே  விஷ வண்டு கடித்து பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 21 March 2022 10:22 PM IST (Updated: 21 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே விஷ வண்டு கடித்து பள்ளி மாணவி சாவு


சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள அம்மகளத்தூர் கிராமம் பால் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில் மகள் தனலட்சுமி(வயது 13). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தனலட்சுமி மதியம் அங்கிருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை ஏதோ விஷ வண்டு கடித்ததால் மயக்க நிலையில் இருந்த தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து  கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷவண்டு கடித்து பள்ளி மாணவி இறந்த சம்பவம் அம்மகளத்தூர் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது.

Related Tags :
Next Story