உளுந்தூர்பேட்டையில் பேக்கரி கடை ஊழியரிடம் செல்போன் திருட்டு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டையில் பேக்கரி கடை ஊழியரிடம் செல்போன் திருட்டு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை
செல்போன் திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் மகன் ஆறுமுகம்(வயது 42). உளுந்தூர்பேட்டையில் உள்ள பேக்கரி கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஆறுமுகம் கடையின் ஷட்டரை முக்கால் பகுதி அளவுக்கு திறந்து வைத்துக்கொண்டு உள்ளே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது செல்போன் காணாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 2 மணியளவில் சுமார் 50 வயது மர்மநபர் கடையின் உள்ளே புகுந்து ஆறுமுகத்தின் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் செல்போனை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொடர் திருட்டு
கடந்த சில நாட்களாக உளுந்தூர்பேட்டை கடை வீதியில் உள்ள பெட்டிக்கடை பழக்கடைகளில் நள்ளிரவில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் கடை வீதியில் கடை நடத்தி வருபவர்கள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில், கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபருக்கும், இந்த திருட்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story