திண்டிவனம் வாலிபருக்கு கத்திவெட்டு


திண்டிவனம் வாலிபருக்கு கத்திவெட்டு
x
தினத்தந்தி 21 March 2022 10:35 PM IST (Updated: 21 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

கேரம்போர்டு விளையாட்டால் ஏற்பட்ட முன்விரோதத்தில் திண்டிவனம் வாலிபருக்கு கத்திவெட்டு விழுந்தது.

திண்டிவனம், 

திண்டிவனம் கிடங்கல்-2 ராஜன் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் மணிகண்டன்(வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் முரளி(30), ராதாகிருஷ்ணன் மகன் விக்கி(25), குமார் மகன் வசந்த்(22) ஆகியோருக்கும் கேரம்போர்டு விளையாடியபோது தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது.  இந்த நிலையில் கிடங்கல்-2 பகுதியில் தனியாக நின்றிருந்த மணிகண்டனை முரளி கத்தியால் வெட்டினார். மேலும் விக்கி, வசந்த் ஆகியோர் கையால் அவரை தாக்கினர். இதில் காயமடைந்த மணிகண்டன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் முரளி, விக்கி, வசந்த் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story