நாமக்கல்லில் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரெங்கசாமி, செயலளார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிறுவன தலைவர் நாகராஜன், தொட்டியநாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட டி.என்.டி. சமூகங்களுக்கு ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் உத்தரவுபடி தமிழகத்தில் டி.என்.டி. கல்வி, பொருளாதார மக்கள்தொகை கணக்கு எடுக்க தனி அலுவலரை நியமிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் செங்கோட்டுவேல், வடக்கு மாவட்ட தலைவர் துரை ரமேஷ், செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story