நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 985 பயனாளிகளுக்கு அடையாள அட்டை-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 985 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு நகர்ப்பற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 985 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நீர் வழிப்பாதையை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், நகர பகுதியில் வாழும் பொது மக்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யவும், பெண்கள் அவர்களது வசிப்பிடத்தின் அருகிலேயே வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையிலும் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டம் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் தொடங்கி வைக்கப்படுகிறது என்றார். இதில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுவாமி, புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுமதி, துணைத் தலைவர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் கேத்திரினாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story