தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 21 March 2022 10:45 PM IST (Updated: 21 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.

தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று தீ குளிக்கும் முயற்சியை தடுத்து விசாரணை நடத்தினர். அந்த பெண் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த சபி (வயது 28) என்பதும், குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. 
வீடு சேதம்
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தனக்கும், உறவினர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சிலர் வீட்டை சேதப்படுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடு்க்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதேபோல் மத்தளபள்ளம் பகுதியை சேர்ந்த முனியன் (48) தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது 4 ஆண்டுகளுக்கு முன்பு சிலரிடம் பணம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்த பிறகும் அதற்குரிய ஒப்பந்த பணத்தை திருப்பி தராமல் மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் பகுதியில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story