சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல் 4 பேர் கைது
சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல் 4 பேர் கைது
சின்னசேலம்
சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் உள்ள கொடையாளப்பன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணி நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தின் கிழக்கு தெருவை சேர்ந்த ராயதுரை, மேற்குதெருவை சேர்ந்த சின்னதுரை உள்பட ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கிடையே திடீர் மோதல் உருவானது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக்கொண்டனர். பின்னர் இது குறித்து அவர்கள் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் ராயதுரை கொடுத்த புகாரின் பேரில் சின்னதுரை, இவரது ஆதரவாளர்கள் சிதம்பரம், குமாரசாமி, ஆகியோர் மீதும், சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் ராயதுரை, இவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், கொடையாளப்பன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னதுரை, சிதம்பரம், ராயதுரை, ராஜேந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story