நாகர்கூடல் பகுதியில் அருகே பாலம் இல்லாததால் முதியவர் உடலுடன் ஆற்றை நீந்தி கடந்த கிராம மக்கள்


நாகர்கூடல் பகுதியில் அருகே பாலம் இல்லாததால் முதியவர் உடலுடன் ஆற்றை நீந்தி கடந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 21 March 2022 10:48 PM IST (Updated: 21 March 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கூடல் அருகே பாலம் இல்லாததால் முதியவர் உடலுடன் கிராம மக்கள் ஆற்றை நீந்தி கடந்து சென்றனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், நாகர்கூடல் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமமக்கள் நாகாவதி அணைக்கு செல்லும் நீர்வழி பாதையில் பாலம் இல்லாததால் ஆற்றை கடந்து சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆத்துகொட்டாய் கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் இறந்தார். இதையடுத்து கிராமமக்கள், முதியவரின் உடலை நாகாவதி அணை நீர் வழிப்பாதையை கடந்து கழனிகட்டூர் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்காக லாரி டியூப்புகள் மீது பாடை அமைத்து அதன் மீது இறந்த முதியவரின் உடலை எடுத்து கொண்டு ஆற்றில் நீந்தி சென்று கழனிகாட்டூர் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். 
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆத்துக்கொட்டாய்-கழனிகாட்டூர் இடையே உள்ள நாகாவதி அணை நீர் வழிப்பாதைக்கிடையே பாலம் அமைத்து தரக்கோரி கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் மழைக்காலங்களில் அபாயகர நிலையில் ஆற்றை கடக்கும் மாணவ-மாணவிகள் பொதுமக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story