ராகு-கேது பெயர்ச்சி விழா
உத்தமபாளையத்தில் பழமையான திருக்காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கோவிலில், ராகு-கேது பெயர்ச்சி விழா மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் பழமையான திருக்காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை கோவில் உள்ளது. இது ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில், ராகு-கேது பெயர்ச்சி விழா மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி ராகு- கேதுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானதை தொடர்ந்து ராகு சிம்கை தேவிக்கும், கேது சித்திரலேகா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. மங்கல நானை கோவில் அர்ச்சகர்கள் அணிவித்தனர். விழாவில் தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story