சங்கராபுரம் அருகே காதலனை கரம்பிடித்த 1 மாதத்தில் இளம்பெண் சாவு இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகார்


சங்கராபுரம் அருகே காதலனை கரம்பிடித்த 1 மாதத்தில் இளம்பெண் சாவு இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 21 March 2022 10:58 PM IST (Updated: 21 March 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே காதலனை கரம்பிடித்த 1 மாதத்தில் இறந்த இளம்பெண்ணின் மர்ம சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

சங்கராபுரம்

இளம்பெண்

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் பிரியா(வயது 24). இவரது தாய், தந்தையர் இருவரும் இறந்துவிட்டதால் தனது பாட்டி ஆதிலட்சுமி(70) என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வேலுமணி மகன் சிவகுமார்(26) என்பவர் பிரியாவை கடந்த 4 வருடமாக காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் கர்ப்பம் அடைந்த பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்திய போது சிவகுமார் மறுத்துவிட்டார்.

திருமணம்

பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்ட சிவகுமாரும், அவரது குடும்பத்தினரும் பிரியாவை அழைத்து கருவை கலைக்கச் சொல்லி மிரட்டியதாக தெரிகிறது.  இது குறித்து பிரியா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து சிவகுமாருக்கும் பிரியாவுக்கும் கடந்த 7.2.22 அன்று அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

பரிதாப சாவு

பின்னர் 2 நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் பிரியாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அங்கிருந்து சென்ற சிவகுமார் மீ்ண்டும் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் சுமார் ஒருமாதத்துக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலன் இன்றி கடந்த 19-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

7 பேர் மீது வழக்கு 

இதை அடுத்த அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் சிவகுமார், இவரது தாய் சாந்தி, தம்பி குபேந்திரன் உள்பட 7 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.










Next Story