கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிள் காப்பர் வயர் திருட்டு போனது.
கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிள் காப்பர் வயர் திருட்டு போனது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆறுமுகத்தின் நண்பர் பொன்னுகான் மோட்டார்சைக்கிளை ஆறுமுகத்தின் கடை அருகில் நிறுத்தி இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை அந்த மோட்டார்சைக்கிளையும், 20 கிலோ காப்பர் வயரையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆறுமுகம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் மோட்டார்சைக்கிள் மற்றும் காப்பர் வயரை திருடியது கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த காதர் பாஷா, தொல்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மாணிக் பாஷா என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story