கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொன்னமராவதி:
முத்துமாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னையூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம், பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு ெசலுத்தி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். இதைதொடர்ந்து இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பக்தர்கள் தீமிதித்தனர்
தொடர்ந்து கோவில் முன்பு 14 அக்னி குண்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதில் கொன்னையூரை சுற்றியுள்ள செம்பூதி, செவலூர், மேலநிலை, மூலங்குடி, கொன்னைப்பட்டி, ரெட்டியாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், வேகுப்பட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்து, அலகு குத்தியும ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொன்னமராவதி தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் செயல் அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story