காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் திருட்டு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 March 2022 11:08 PM IST (Updated: 21 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

தளவாபாளையம் அருகே காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நொய்யல்,
தட்டுப்பாடு
காவிரி ஆற்றில் விதிமுறைகளை மீறி வரைமுறை இல்லாமல் மணல் அள்ளுவதை தடுக்கவும், ஆற்றின் நீர்வளத்தை பாதுகாக்கவும் கோர்டு உத்தரவுப்படி அரசு காவிரி ஆற்றில் செயல்பட்டுவந்த மணல் குவாரிகளை மூடியது. இதனால் கட்டுமானத்திற்கு மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மணலுக்கு மாற்றான எம். சான்ட் மற்றும் பி. சான்டின் விலையும் அதிகளவு உயர்ந்துள்ளது.
இதனால் உள்ளூர் தேவையை கருத்தில் கொண்டு மீண்டும் மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவெடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது. 
மணல் திருட்டு
இந்நிலையில் வீடு கட்டுவோரின்ஆற்றுமணல் தேவையை பயன்படுத்தி சிலர் முறைகேடாக ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக சிலர் இரவு நேரங்களில் மினி லாரிகளில் மணல் திருடி வருகின்றனர்.அதை சுற்றுவட்டாரப்பகுதியில் ஒரு யூனிட் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மணல் அள்ள வசதியாக காவிரி ஆற்றுக்குள் நீரோட்டத்தை இடம் மாற்றிவிடுவதால் குடிநீர் ஆதாரங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. 
பொதுமக்கள் கோரிக்கை
அதேபோல் ஆற்றுக்குள் நினைத்த இடங்களில் மணல் அள்ளுவதால் ஏற்படும் குழிகளில் ஆழம் தெரியாமல் பொதுமக்கள் இறங்குவதால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயநிலையும் ஏற்படுகிறது. எனவே அரசு தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story