குண்டடம் அருகே உள்ள உப்பாறு பாசன பகுதியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் நெல்சாகுபடி செய்துள்ளனர்.
குண்டடம் அருகே உள்ள உப்பாறு பாசன பகுதியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் நெல்சாகுபடி செய்துள்ளனர்.
குண்டடம்,
குண்டடம் அருகே உள்ள உப்பாறு பாசன பகுதியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் நெல்சாகுபடி செய்துள்ளனர்.
உப்பாறு அணை
குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணை கடந்த 1968-ம் ஆண்டு உப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக பூளவாடி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, காசிலிங்கம்பாளையம், மேட்டுக்கடை, மானூர்பாளையம் உள்ளிட்டவை விளங்குகின்றன. பருவமழை மற்றும் பி.ஏ.பி. கசிவு நீர் மூலம் இந்த அணைக்கு தண்ணீர் வந்துகொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பி.ஏ.பி. தண்ணீர் நேரடியாக உப்பாறு அணைக்கு திறந்துவிடப்படுவதும் நடக்கிறது. இந்த அணையின் இடதுகரை கால்வாய் மூலம் 3 ஆயிரத்து 538 ஏக்கரும், வலதுகரை கால்வாய் மூலம் 2 ஆயிரத்து 516 ஏக்கரும் பாசன வசதி பெற்று வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த 2005-ம் ஆண்டு பெய்த கனமழையால் அணை நிரம்பியது. அதன் பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் அணை நிரம்பவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.
உப்பாறு நீர்பிடிப்பு பகுதியிலும் வரலாறு காணாத அளவில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் பி.ஏ.பி. தண்ணீரும் அணைக்கு திறந்துவிடப்பட்டு வந்ததால் அணை மளமளவென நிறைந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி அணையிருந்து உபரி நீரும் திறக்கப்பட்டது. இதனால் உப்பாறு பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல் நடவு
உப்பாறு பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததுடன், வயல்களில் தண்ணீர் ஊற்றெடுத்தது. இதனால் நீண்ட வருடங்களுக்கு பின்னால் நெல்நடவு செய்ய முடிவு செய்து விவசாயிகள் நெல்நடவுக்காக வயல்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அணையின் பாசன பகுதிகளான தேர்ப்பாதை, கெத்தல்ரேவ், சின்னியகவுன்டம்பாளையம், வெங்கிட்டிபாளையம், மடத்துபாளையம், காளியப்பகவுண்டம்புதூர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து முற்றும் தருணத்தில் உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு பின்னர் படிப்படியாக அறுவடைப்பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 ஆண்டுகளுக்கு பிறகு
இதுபற்றி உப்பாறு பாசனப் பகுதி விவசாயிகள் தரப்பில் கூறும்போது, எங்களது நிலங்கள் உப்பாறு ஆயக்கட்டுக்கு சேர்ந்த பகுதி என்றாலும் அணை நிரம்பாததால் முழுமையாக தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் கிடைக்கும் தண்ணீரைக்கொண்டு பயிர் செய்யும் நிலையில் இருந்தோம்.
கடந்த பருவமழை காலத்தில் பலத்த மழை பெய்ததால் அணை நிரம்பியதுடன், அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முன்னரே எங்களது கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் உயர்ந்துவிட்டது. மேலும் வயல்களில் தண்ணீர் ஊற்றெடுத்துவிட்டது. இதனால் கடந்த சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு நெல் நடவுப் பணியில் ஈடுபட்டோம் என்றனர்.
Related Tags :
Next Story