மராட்டியத்தில் 2-வது முறையாக 100-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 21 March 2022 11:25 PM IST (Updated: 21 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 2-வது முறையாக 100-க்கு கீழ் கொரோனா பாதிப்பு சென்றுள்ளது.

மும்பை, 
மராட்டியத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த சனிக்கிழமை மாநிலத்தில் பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது. இந்தநிலையில் நேற்றும் தொற்று பாதிப்பு 100-க்கு கீழ் சென்றது. மாநிலத்தில் புதிதாக 99 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல மாநிலத்தில் புதிதாக கொரோனாவுக்கு உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை மராட்டியத்தில் 78 லட்சத்து 72 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 767 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது மாநிலத்தில் 1,273 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் மும்பையில் புதிதாக 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நகரில் தற்போது 299 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 20 ஆயிரத்து 26 நாட்களாக ஆக உள்ளது.

Next Story