2-ம் காப்பு கட்டும் நிகழ்ச்சி
வலங்கைமானில் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலில் 2-ம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வெள்ளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது.
வலங்கைமான்;
வலங்கைமானில் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலில் 2-ம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வெள்ளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது.
பாடைக்கட்டி மகா மாரியம்மன்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. பாடைக்கட்டி மகா மாரியம்மன் என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். மாங்கல்யம் வரம், குழந்தைவரம் அளிக்கும் அம்மனாக போற்றப்படும் இந்த கோவில் சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது.
இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. இதில் மகா மாரியம்மன் சப்பரம் தயார் செய்யப்பட்டு, மின்னொளி அலங்காரத்தில் மங்கள வாத்திய இசை நிகழ்ச்சியுடன் கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் புறப்பட்டு வடக்கு அக்ரகாரம் கடைத்தெரு கும்பகோணம் ரோடு வழியாக வீதிஉலா நடக்கிறது.
வெள்ளி அன்னவாகனம்
நேற்று முன்தினம் 2-ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பாடை கட்டி மகா மாரியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வலங்கைமான் நகரின் முக்கிய வீதிகளில் வீதிஉலா காட்சி நடைபெற்றது. 27-ந் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பாடை காவடி திருவிழாவில் தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை திருவாரூர் உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமையில் மகாமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் ரமணி ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story