ஆற்காடு அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை


ஆற்காடு அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2022 11:40 PM IST (Updated: 21 March 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது  68), விவசாயி. சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சேட்டு விஷம்  குடித்து விட்டு அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். 

அவரை மீட்டு ஆற்காடுஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story