சீர்மரபினர் நல சங்கத்தினர் கோரிக்கை மனு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 March 2022 11:47 PM IST (Updated: 21 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

சீர்மரபினர் நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

கரூர்,
கரூர் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், டி.என்.டி. ஒற்றை சாதி சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும், மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தனி அலுவலரை நியமிக்க வேண்டும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.  இதில், சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், பொருளாளர் தேக்கமலை, மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், குலாலர் நல சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story