மரக்கிளை முறிந்து விழுந்து பஸ் டிரைவர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 March 2022 11:50 PM IST (Updated: 21 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே மரக்கிளை முறிந்து விழுந்து பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தோகைமலை,
தனியார் பஸ் டிரைவர்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மருதை. இவரது மகன் நந்தகுமார் (வயது 26). தனியார் பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று பணியை முடித்து கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதையடுத்து ரமேசின் மோட்டார் சைக்கிளில் நந்தகுமார் பின்னால் அமர்ந்து கொண்டு  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. தோகைமலையில் உள்ள ஒரு திருமணமண்டபம் அருகே சென்றபோது பலத்த காற்றுக்கு அங்கிருந்த புளியமரத்தின் கிளை ஒன்று முறிந்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த நந்தகுமார் தலையில் விழுந்தது. 
பலி
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நந்தகுமாரின் அண்ணன் அருள்முருகன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story