விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ரீத்தா பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 450-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் ஈ.சி.ஜி., ரத்த பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் நாமக்கல் ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிசாமி, அட்மா குழு தலைவர் பழனிவேல், நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன், பொறியாளர் கலைச்செல்வி மற்றும் விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி துணை தலைவர் சசிகலா, எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் டாக்டர் சுரேஷ், பிரீத்தி, தீபா, வனிதா, பூபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ராஜகணபதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story