திருச்செங்கோடு நகராட்சி தினசரி சந்தையை சீரமைப்பது குறித்து ஆலோசனை
திருச்செங்கோடு நகராட்சி தினசரி சந்தையை சீரமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்செங்கோடு தினசரி சந்தையை சீரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணை தலைவர் கார்த்திகேயன், என்ஜினீயர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி தினசரி சந்தையை சீரமைப்பது, நவீனபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பணிகள் முடியும் வரை தினசரி சந்தையை தற்காலிகமாக எங்கு இடமாற்றம் செய்யலாம்? என்பது குறித்து கேட்டறியப்பட்டது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட கொ.ம.தே.க. செயலாளர் நதிராஜவேல் மற்றும் நந்தகுமார், தங்கமுத்து, சந்தையில் வியாபாரம் செய்வோர், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story