சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 March 2022 11:56 PM IST (Updated: 21 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கரூர், 
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதிய தொகை உயர்த்தி வழங்கக்கோரி  சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்க செயலாளர் கணேசன் தலைமையில் 22 பேர் ரெயில் மூலம் சென்னை செல்ல கரூர் ரெயில் நிலையம் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கரூர் ரெயில் நிலையம் வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story