ஆற்காடு அருகே கர்ப்பிணி திடீர் சாவு


ஆற்காடு அருகே கர்ப்பிணி திடீர் சாவு
x
தினத்தந்தி 21 March 2022 11:57 PM IST (Updated: 21 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே கர்ப்பிணி திடீரென இறந்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அடுத்த கனியனூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24) வேன் டிரைவர். இவரது மனைவி வாணிஸ்ரீ (21). இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வாணிஸ்ரீ மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அடிக்கடி வாந்தி ஏற்பட்டு சரியாக சாப்பிடுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந்் தேதி இரவு வாணிஸ்ரீக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story