தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
நீடாமங்கலம், மார்ச்.22-
நாகை மாவட்டம் சங்கமங்கலம் நீலிஅம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி அமுதா(வயது45). முருகேசனும் அவரது மனைவி அமுதாவும் கடந்த 13 ஆண்டுகளாக கோவில்வெண்ணி தெற்குதெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய போர் கொட்டகையில் தங்கி விவசாய பணி செய்து வந்தனர். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அமுதா போர் கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story