ஒரே நாளில் 7 கோவில்களில் குடமுழுக்கு
திருக்கடையூரில் ஒரே நாளில் 7 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.
திருக்கடையூர்:
திருக்கடையூரில் ஒரே நாளில் 7 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.
7 கோவில்களில் குடமுழுக்கு
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருக்கடையூர் கோவிலை சுற்றி நான்கு வீதிகளில் அமைந்துள்ள சித்தி விநாயகர், கற்பக விநாயகர், வெள்ளை வாரண விநாயகர், அமிர்தரட்ச விநாயகர், சக்தி விநாயகர் மற்றும் திருக்கடையூர் எல்லையில் அமைந்துள்ள பிடாரி அம்மன், ஆனை குளத்தில் அமைந்துள்ள எதிர்கலேஸ்வரர் கோவில் ஆகிய 7 கோவில் குடமுழுக்கு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.
யாகசாலை பூஜைகள்
முன்னதாக யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 2-ம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து நேற்று பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவில்களின் கோபுர விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
Related Tags :
Next Story