குடியாத்தத்தில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
குடியாத்தத்தில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
குடியாத்தம்
குடியாத்தம் டவுன் ராஜகணபதி நகர் அருகே உள்ள திருமண மண்டபம் பின்புறம் நேற்று மாலையில் ஒரு வீட்டின் அருகே சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட நாகப்பாம்பை குடியாத்தம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story