ராகு-கேது பெயர்ச்சி விழா
தஞ்சாக்கூரில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவில் தெப்பக்குளத்தில் ராகு, கேதுவுக்கு சன்னதிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு தெப்பக்குளத்திற்கு முன்பாக யாகம் வளர்க்கப்பட்டது.
கூடலூர் மகா சக்தி பீடம் சுந்தரவடிவேல் சுவாமிகள் யாக பூஜைகளை நடத்தினார். இதனைத்தொடர்ந்து கோவில் பூசாரி பாலசுப்பிரமணியன் ராகு, கேதுவுக்கு சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார பூஜை நடத்தினார். இதில் தொழிலதிபர் துபாய் காந்தி மற்றும் தஞ்சாக்கூர் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story