ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்


ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 12:39 AM IST (Updated: 22 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்;
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டி டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்றாததை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தலைவர் தம்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், பவுன்ராஜ், ஏ.ஜ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் குணசேகரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைைய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story