2 ரெயில்களில் ஒருவர் பின் ஒருவராக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
2 ரெயில்களில் ஒருவர்பின் ஒருவராக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழ வேண்டும் என கடிதத்தில் உருக்கமான தகவல் எழுதப்பட்டுள்ளது.
விருதுநகர்,
2 ரெயில்களில் ஒருவர்பின் ஒருவராக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழ வேண்டும் என கடிதத்தில் உருக்கமான தகவல் எழுதப்பட்டுள்ளது.
நர்சிங் மாணவி
விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர், வேலுச்சாமி. இவருடைய மகள் சோலைமீனா (வயது 20). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி பள்ளியில் 2-வது ஆண்டு படித்து வந்தார். பயிற்சிப்பள்ளியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். நர்சிங் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி இருந்தார்.
இவரும் சாத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பிரவீன் குமார் எலக்ட்ரீசியன் ஆவார். இவர்கள் இருவரும் அடிக்கடி விருதுநகரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
அடுத்தடுத்து தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் சோலை மீனா தனது ஊர் அருகே உள்ள பட்டம்புதூர் ெரயில்வே தண்டவாளம் பகுதிக்கு வந்தார். திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் விரைந்து சென்று சோலை மீனாவின் உடலை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோலை மீனா ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேள்வியுற்ற காதலன் பிரவீன்குமார் மனவேதனை அடைந்தார். எனவே அவரும் தற்கொலைக்கு முடிவெடுத்து, விருதுநகர் வேலுச்சாமி நகர் அருகில் உள்ள தண்டாவளம் பகுதிக்கு வந்து, குருவாயூரிலிருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில்முன்பு பாய்ந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்த விருதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
உருக்கமான கடிதம்
2 ரெயில்களில் ஒருவர்பின் ஒருவராக காதல் ஜோடி பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக பிரவீன்குமார் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீயும் (சோலை மீனா), நானும் சேர்ந்து வாழ முடியவில்லை. சாகவும் முடியவில்லை. நீ மட்டும் என்னை விட்டுச் சென்றுவிட்டாய். நான் நீ இல்லாமல் இருக்க மாட்டேன் என்று உனக்கு தெரியும். ஏன் என்னை விட்டுச் சென்றாய்?. நீ இல்லாத இவ்வுலகில் நான் மட்டும் எப்படி வாழ்வேன்?
என்னை மன்னித்துவிடு. தற்கொலைக்கு முக்கிய காரணம் மீனா பணியாற்றிய தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 பேர் தான் (இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்). அவர்கள்தான் எங்கள் சாவுக்கு முழுக்க காரணம். எங்களை வாழ விடாமல் பிரித்தார்கள். எங்களை சாவில் எப்படி பிரிப்பார்கள் என்று பார்ப்போம்? அடுத்த பிறவியிலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு கடவுள் துணை இருக்கட்டும். என் மீது உண்மையான அன்பு வைத்த அனைவருக்கும் நன்றி.
இப்படிக்கு பிரியாவிடையுடன் பிரவீன் குமார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ெரயில்வே போலீசாரும், விருதுநகர் ெரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story