ஆபாச வீடியோவை காண்பித்து மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்
தன்னுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்ததை அவரது காதலன் ரகசியமாக படம் பிடித்து பகிர்ந்தார். அந்த ஆபாச காட்சியை வைத்து மிரட்டி 8 பேர் கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
தன்னுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்ததை அவரது காதலன் ரகசியமாக படம் பிடித்து பகிர்ந்தார். அந்த ஆபாச காட்சியை வைத்து மிரட்டி 8 பேர் கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரகசியமாக படம் பிடிப்பு
விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிஹரன் (வயது 27). இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடி உள்ளார்.
ஹரிஹரன் காதலிப்பதாக கூறியதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஹரிஹரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததால், அவர் விரித்த வலையில் அந்த பெண் சிக்கினார்.
மேலும் இந்த வீடியோ காட்சியை ஹரிஹரன் தனது நண்பர்களான ரோசல்பட்டியை சேர்ந்த மாடசாமி (37), விருதுநகர் மொன்னி தெருவை சேர்ந்த ஜுனத்அகமது (27) மற்றும் சில மாணவர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த கும்பலில் மாடசாமி தவிர மற்றவர்கள் அனைவரும் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
தங்களது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மாடசாமியும் அந்த வீடியோ காட்சியை இளம் பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி தன் ஆசைக்கு இணங்காவிட்டால் இக்காட்சியை உன் தாயாருக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி பெண்ணின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
8 பேர் கைது
இதனால் அந்த பெண் மன நெருக்கடிக்கு ஆளானார். பின்னர் பாண்டியன் நகர் போலீசில் புகார் அளித்தார். விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா நேரடி விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் பால் வியாபாரி ஹரிஹரன் உள்பட 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களில் 5 பேர் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story