பெண் டாக்டர் தற்கொலை


பெண் டாக்டர்  தற்கொலை
x
தினத்தந்தி 22 March 2022 1:01 AM IST (Updated: 22 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்

திருச்சி
திருவாரூரை சேர்ந்தவர் முகமதுரபி, இவருடைய மனைவி நிலோபர் (வயது 44). தம்பதி இருவரும் டாக்டர்கள் ஆவர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலோபர் வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு ஆண்டாக திருச்சி வரகனேரி மேட்டுத்தெருவில் உள்ள தனது தாயார் வீட்டில் நிலோபர் தனது மகனுடன் வசித்து வந்தார். மற்றொரு மகன் தந்தையுடன் இருந்தார்.
இந்தநிலையில், நிலோபருக்கு விவாகரத்து கொடுப்பதாக அவருடைய கணவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலோபர், சம்பவத்தன்று மதியம் தனது தாயார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி சம்பவ இடத்துக்கு சென்று நிலோபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நிலோபரின் தாயார் ஆயிஷா கொடுத்த புகாரின்பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிலோபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story