உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்க கூட்டம்
சாத்தூரில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. 6-வது ஆண்டு மாவட்ட பேரவை கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்லச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளை அங்கீகரித்து உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்க வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் மாதம் ரூ. 4000 வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் சாராள், ஒன்றிய குழு மனோஜ்குமார், சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story