2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்த இளம்பெண்
பட்டுக்கோட்டையில், குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்தார். இதில் தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர். 5 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்தார். இதில் தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர். 5 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
2 குழந்தைகளுடன் ரெயில்முன் பாய்ந்தார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி(வயது 30). இவர்களுக்கு 5 வயதில் சமயா என்ற பெண் குழந்தையும், 2 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
நேற்று காலை 10.55 மணியளவில் திருவாரூரில் இருந்து காரைக்குடி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. லட்சத்தோப்பு ஆற்றங்கரை அருகே ரெயில் சென்றபோது மகேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்தார்.
தாய்-மகன் சாவு, சிறுமி உயிர் ஊசல்
இதில் மகேஸ்வரியும் அவரது மகன் தர்ஷனும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த உடன் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் மகேஸ்வரி, தர்ஷன் ஆகிய இருவரின் உடல்களையும் ஆபத்தான நிலையில் இருந்த சமயாவையும் அதே ரெயிலில் பேராவூரணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து சமயாவை புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து திருவாரூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரி ஏன் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார். குடும்ப தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 குழந்தைகளுடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story