ஓடும் பஸ்சில் ஊழியரிடம் ரூ.1.70 லட்சம் அபேஸ்
ஓடும் பஸ்சில் ஊழியரிடம் ரூ.1.70 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது
திருச்சி
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் சிவசக்திவேல் (வயது 39). இவர் மதுரையில் உள்ள பிரபல எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சியில் பாத்திரம் வினியோகம் செய்துவிட்டு, ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் சாலை சூலக்கரை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார். காந்திமார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்கிய போது, பணம் இருந்த பையை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் பணப்பையை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story