கோவில் உண்டியல்கள் உடைப்பு
திருப்பனந்தாள் அருகே கோவில் உண்டியல்களை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் அருகே கோவில் உண்டியல்களை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
மாரியம்மன் கோவில்
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளை அடுத்த கருப்பட்டிசேரி மெயின் ரோட்டில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் கோவில் வளாகத்திலேயே இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஒரு உண்டியலையும், அம்மன் கழுத்தில் கிடந்த 7 கிராம் மதிப்புள்ள தாலி சங்கிலியையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
வலைவீச்சு
இதுகுறித்து மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல்களை உடைத்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story