நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் காயம்
நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் காயமடைந்தது
தா.பேட்டை
தா.பேட்டை அருகே காவிரிப்பட்டி செல்லும் சாலை பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி என்.கருப்பம்பட்டி கிராமத்திற்குள் வந்துள்ளது. மானை கண்டதும் அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் அதனை துரத்தி கடித்தன. இதில் காயமடைந்த அந்த புள்ளிமான் அங்கிருந்து வேகமாக ஓடி அப்பகுதியில் உள்ள பேரூராட்சி வள மீட்பு பூங்காவிற்குள் புகுந்தது. அங்கிருந்த பணியாளர்கள் அந்த புள்ளிமானை மீட்டு தண்ணீர் கொடுத்து பேரூராட்சி அலுவலகத்திற்கும், கால்நடைத்துறை, வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் சக்திவேல் காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து புள்ளிமானின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சை அளிக்க வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story